தேசிய மீலாத் விழா

தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக மாவட்ட செயலகத்தில் 24.07.2017 அன்று மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சுந்தரம் அருமைநாயகம் அவர்களின் தலைமையில் கலந்துரையாடல் இடம் பெற்றது.

முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு தேசிய மிலாத் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் பல முக்கிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செயற்றடுத்துவதும் இதில் ஒரு பிரதான அம்சமாகும்.

இந்த வகையில் இவ்வாண்டு யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஆகிய மாவட்டங்களை ஒன்றிணைத்து தேசிய மீலாத் விழா யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவினை சிறப்பாக நடாத்துவது, தேசிய மீலாத் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான விடயங்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஆராயப்பட்டன.

இக்கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு சி.சத்தியசீலன், முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக், தபால் சேவை, முஸ்லீம் சமய அமைச்சின் ஆலோசகர் எம்.எச்.முயினுதீன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர் திரு.பிருந்தாகரன், கரைச்சி மற்றும் பூநகரி பிரதேச செயலாளர்கள் , மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களின் தலைவர்கள் முஸ்லீம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மாவட்ட, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

 

பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான சுயதொழில் பயிற்சி நெறி

கிளிநொச்சி மாவட்டத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் பற்றிக் சாயமிடும் பயிற்சி நெறி கிளிநொச்சியில் அமைந்துள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான தேசிய நிலையத்தில் 03.07.2017 அன்று கிளிநொச்சி மாவட்ட உதவி அரசாங்க அதிபரும் மேற்படி நிலையத்தின் உதவிப்பணிப்பாளருமாகிய திரு. த.பிருந்தாகரன் அவர்களது தலைமையில் இடம் பெற்றது.

மகளீர் அபிவிருத்தி மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அனுசரணையுடன் கிளிநொச்சி மாவட்ட செயலக ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் சுயெதொழில் பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்றையதினம் பற்றிக்சாயம் இடும் பயிற்சிநெறியில் கலந்துகொண்ட ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தலா 5000 ரூபா பெறுமதியான மூலப்பொருட்களும் வழங்கப்பட்டன.

இப்பயிற்சியில் கலந்து கொண்ட பயனாளிகள் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான தேசிய நிலையத்தில் தொடர்ச்சியாக தமது செயற்பாடுகளை மேற்கொள்ளலாம் எனவும் இவர்களுக்குரிய மேலதிக பயிற்சிகளும் தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும் நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

மாகாண விளையாட்டு போட்டியில் கிளிநொச்சி மாவட்டம் இரண்டாம் இடத்தினை தட்டிச்சென்றுள்ளது

2017ம் ஆண்டுக்கான வடமாகாண விளையாட்டுப்போட்டிகளில் 175 புள்ளிகளை பெற்று கிளிநொச்சி மாவட்டம் 2ம் இடத்தினை பெற்றுக்கொண்டது.

ஆண்டுதோறும் வடமாகணத்திலுள்ள மாவட்டங்களுக்கிடையே விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. அந்தவகையில் 11வது வடமாகாண விளையாட்டு போட்டி அண்மையில் இடம்பெற்றது. இதில் நடைபெற்ற 43 விளையாட்டுகளில் தைகொண்டோ (பெண்கள்), யூடோ (பெண்கள்), கரப்பந்தாட்டம்(பெண்கள்), கடற்கரை கரப்பந்தாட்டம்(பெண்கள்), கடற்கரை கரப்பந்தாட்டம்(ஆண்கள்), துடுப்பாட்டம்(ஆண்கள்) போன்ற விளையாட்டுகளில் முதலாம் இடங்களையும், 10 விளையாட்டுகளில் இடண்டாம் இடங்களையும், 9 விளையாட்டுகளில் மூன்றாம்  இடங்களையும் கிளிநொச்சி மாவட்டம் பெற்றுக்கொண்டது. இப்போட்டிகளில் கிளிநொச்சி மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட வீர வீரங்கனைகளுக்கு கிளிநொச்சி மாவட்டம் சார்பாக அரச அதிபர் திரு சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

மேலும் அடுத்த 2018ம் ஆண்டுக்கான மாகாண விளையாட்டு போட்டிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் நடத்துவதற்கான ஆரம்பநிகழ்வாக மாகாண விளையாட்டு கொடி மாகாண விளையாட்டு பணிப்பாளர் திரு இ.குருபரன் அவர்களால் கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு எம்.ஆர் மோகனதாஸ் அவர்களிடம் சம்பிரதாய பூர்வமாக கையளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 
Sinhala (Sri Lanka)Tamil-Sri LankaEnglish (United Kingdom)
District Secretary


Suntharam Arumainayaham

Additional District Secretary

Sivapathasuntharam Sathiyaseelan

scheduled Events
August 2017
S M T W T F S
30 31 1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31 1 2