DSCN9582இலங்கையின் பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களது தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 15-02-2019 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி திட்டத்தின் மீளாய்வு கூட்டம் இலங்கையின் பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களது தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 15-02-2019 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கௌரவ அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.அன்றைய நாளின் ஆரம்பமாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் 2500 மில்லியன் ரூபா பெறுமதியான கட்டட நிர்மானத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில்  கடந்த காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 50 விவசாயிகளுக்கு பயிர்செய்கை காப்புறுதி சபையின் கீழ் இழப்பட்டு காசோலைகள் வழங்கப்பட்டது. அத்துடன் இவ்வழிவில்  9500 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10000.00 ரூபா வழங்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மற்றும் இவ்வாண்டு வரவு செலவு திட்டத்தில் இம்மாவட்டத்தில் 12500 வீடுகளை நிர்மானிக்க உடனடி தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார். 

DSCN9662

மீள்குடியேற்ற அமைச்சினால் உற்பத்தி கூட்டுறவு கருத்திட்டத்தின்கீழ் கிளிநொச்சி கரைச்சிதெற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்குசேதனைப்பயிற்செய்கைக்காக இரண்டு இழுவை இயந்திரம் ,பின் இணைந்த ஊர்திவழங்கப்பட்டது
 

உற்பத்தி திறனில் தேசிய அளவில் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்தது கிளிநொச்சி மாவட்ட செயலகம்


2016/2017 ம் ஆண்டிற்கான தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது
உற்பத்தி திறன் செயலகத்தினால் இலங்கையிலுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் உற்பத்தி திறன் செயற்பாடுகளை மதிப்பீடு செய்யும் நோக்கில்  உற்பத்தி திறன் போட்டிகளை நடத்தி வருகின்றது. அந்தவகையில் இப் போட்டியில் இம்முறை கலந்து கொண்டு தேசிய அளவில் முதல் இடத்தைப் பெற்றுக் கொண்ட பெருமை கிளிநொச்சி மாவட்டத்திற்கு சாரும்.....

49178123 2247506345261678 688615757289881600 n