Samurthymeet

18.01.2020 சனிக்கிழமை காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்டத்தின் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட முன்னேற்றக் கூட்டம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.கூட்டத்தில் சமூக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் திரு.தாரக பாலசூரிய மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் திரு .முருகேசு சந்திரகுமார் ஆகியோருடன் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு .எஸ் .சத்தியசீலன் ,மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திருமதி.ஆரணி தவபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.கடந்த ஆண்டு மேற்கொள்ளப்படட வேலைத்திட்டங்கள் மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.இக்கலந்துரையாடலில் சிரேஷ்ட முகாமையாளர்கள் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , சமூக சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.