கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காகவும்,பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்குவதற்காகவும் கௌரவ அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும் கௌரவ அமைச்சர் பழனி திகாம்பரம் ஆகியோர் வருகை தந்திருந்தனர். கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலினை தொடர்ந்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்தனர்