கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சிறுவர் இல்லங்களை கிளிநொச்சி மாவட்ட சிறுவர் மேற்பார்வை குழுவினால் மேற்பார்வை குழுவினால் கண்காணிக்கப்பட்டது இதில் PHI, CRDO, DO, NCPA, ADE, Counselor  அங்கம் வகித்தனர் சிறுவர் இல்லங்களில் சுகாதாரம் சுற்றுச்சூழல குடிநீர் கல்வி பாதுகாப்பு பிள்ளைகளின் உளநிலை பிள்ளைகளை மீள்குடும்பத்துடன் இணைத்தல் ஆகிய செயற்பாடு தெடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. இங்கு அடயாளம் காணப்பட்ட பிரச்சனைகளை இல்ல முகாமையாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மற்றும் வருடத்தில் 03 தடவை இல்லங்கள் மேற்பார்வை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.   

கிளிநொச்சி மாவட்ட செயலக தைப்பொங்கல் திருவிழா

கிளிநொச்சி மாவட்ட செயலக நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் விழா இன்றைய தினம் (16-01-2019)  வெகு விமர்சையாக இடம் பெற்றது.  இந்நிகழ்வு மேலதிக மாவட்ட செயலாளர்  மற்றும் திணைக்கள தலைவர்களும் பதவி நிலை உத்தியோகத்தர்களும் ஏனைய அலுவலக உத்தியோகத்தர்களும் பங்கு பற்றி சிறப்பித்தனர்

வடமாகாணத்தில் பெய்த கடும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் இதனடிப்படையில் 17523 குடும்பங்களை சேர்ந்த 54688 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன் விளைவுகள் மற்றும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் முகமாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கருஜெயசூரிய அவர்களது பங்குபற்றளோடு வெள்ள அனர்த்தம் காரணமாக  பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தின் அனர்த்தம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் 03-01-2019

திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் கடும் பாதிப்புக்கள் ஏற்ப்பட்டுள்ளது இதன் விளைவுகள் மற்றும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் முகமாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் மக்கள் இருப்பிடங்களுக்கான நஸ்டஈட்டினை வழங்கு தொடர்பாகவும் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு வேண்டிய தேவைப்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது...

விவசாய அமைச்சர் கௌரவ ஹரிஸ் கிளிநொச்சிக்கு விஜயம்

விவசாயம் ,கிராமப்புற பொருளாதார அலுவல்கள்,கால்நடைகள் மேம்பாடு ,நீர்ப்பாசனம் ,மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் எம் ஹரிஸ் இன்று(05.01.2019)கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

வெள்ள்த்தினால் பாதிக்கப்பட்ட விவசாயம் மற்றும் கால்நடைகள் குளங்கள் உள்ளிட்ட தனது அமைச்சின் கீழ் வருகின்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கே அமைச்சர் எம் ஹரிஸ் தனது அமைச்சின் செயலாளர்,மற்றும் கமநல சேவைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம்,கமநல காப்புறுதி சபையின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட உயரதிகாரர்கள் சகிதம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிலைமைகளை ஆராயும் கூட்டத்திலும் கலந்து கொண்டார்.இதன்போது வெள்ள அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில்விவசாயம் ,கால்நடைகள்,நீர்ப்பாசனம் போன்ற துறைகளில் ஏற்பட்ட அழிவுகள் அதனால் விவசாயிகள் எதிர்நொக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நட்ட ஈடுகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும்.குறிப்பாக நெல்வயல்கள் முழுமையாக அழிந்திருந்தால் நாற்பதினாயிரம் ரூபா காப்புறுதி சபையால் வழங்கப்படும்.அதற்கான மதிப்பீடுகள் சரியாக மேற்க்கொள்ளப்பட வேண்டும்.அத்தோடு கால்நடைகள் இறந்திருந்தாலும் அதற்கான கொடுப்பனவும் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்

 

உற்பத்தி திறனில் தேசிய அளவில் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்தது கிளிநொச்சி மாவட்ட செயலகம்


2016/2017 ம் ஆண்டிற்கான தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது
உற்பத்தி திறன் செயலகத்தினால் இலங்கையிலுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் உற்பத்தி திறன் செயற்பாடுகளை மதிப்பீடு செய்யும் நோக்கில்  உற்பத்தி திறன் போட்டிகளை நடத்தி வருகின்றது. அந்தவகையில் இப் போட்டியில் இம்முறை கலந்து கொண்டு தேசிய அளவில் முதல் இடத்தைப் பெற்றுக் கொண்ட பெருமை கிளிநொச்சி மாவட்டத்திற்கு சாரும்.....

49178123 2247506345261678 688615757289881600 n

 

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காகவும்,பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்குவதற்காகவும் கௌரவ அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும் கௌரவ அமைச்சர் பழனி திகாம்பரம் ஆகியோர் வருகை தந்திருந்தனர். கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலினை தொடர்ந்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்தனர்

 திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக கடுமையாக  பாதிக்கப்பட்ட கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் அனர்த்தம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களது பங்குபற்றளோடு  24 -12-2018 இடம் பெற்றது

திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் கடும் பாதிப்புக்கள் ஏற்ப்பட்டுள்ளது இதன் விளைவுகள் மற்றும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் முகமாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது

இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா எம் ஏ சுமந்திரன் சி சிவமோகன் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா சாள்ஸ் நிர்மலநாதன் சி சிறிதரன் மற்றும் கிளிநொச்சி  மாவட்ட அரசங்க சு அருமைநாயகம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் கிளிநொச்சி, முல்லைத்தீவு   இராணுவம் போலீசார் மற்றும் திணைக்கள உயரதிகாரிகள் 

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் மக்கள் இருப்பிடங்களுக்கான நஸ்டஈட்டினை வழங்கு தொடர்பாகவும் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு வேண்டிய தேவைப்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது...தொடர்ந்து இக்குழுவினர் பொதுமக்கள் தங்கியிருந்த முகாம்களைப் சென்று பார்வையிட்டனர்...

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு  முதற்கட்டமாக பத்தாயிரம் ரூபா வழங்கப்படும் என பொது நிர்வாக மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளனது

கடும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்

கடந்த சில நாட்களாக வடமாகாணத்தில் பெய்த கடும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் இதனடிப்படையில் 15198 குடும்பங்களை சேர்ந்த 47578 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டள்ளனர் இதன் விபரங்கள் (26-12-2018 -- at 1.00 PM)

நலன்புரி நிலையம் குடும்ப எண்ணிக்கை நபர்களின் எண்ணிக்கை
கிளி திருமுறிகண்டி இந்து மகாவித்தியாலயம் 110  397
கிளி பாரதிபுரம்  அ.த.க பாடசாலை 174  569
கிளி மத்திய கல்லூரி 121  405
கிளி புநகரி அ.த.க பாடசாலை 59  172
கிளி பரந்தன் இந்து மகாவித்தியாலயம் 230
கிளி முருகானந்தா கல்லூரி 393
கிளி கணடாவளை மகாவித்தியாலயம் 63  332
கிளி தர்மபுரம் அ.த.க பாடசாலை 102
தர்மபுரம் பொது மண்டபம் 33  123
கிளி நாகேந்திரா மகாவித்தியாலயம் 170  550
கிளி மயில்வாகனபுரம் அ.த.க பாடசாலை 03
கிளி கட்டக்காடு மகாவித்தியாலயம் 185
கிளி வேம்படி மகாவித்தியாலயம் 83
கிறிஸ்தவ தலம் 219
முகமாலை பொது மண்டபம் 7  18
கல்லாறு மகாவித்தியாலயம் 165 602  

கிளிநொச்சி மாவட்ட 2018 ஆம் ஆண்டிற்கான அரச திணைக்களங்களிற்கு இடையேயான அரச அதிபர் விளையாட்டுக் கிண்ணத்தினை கரைச்சி பிரதேச செயலகம் தன்வசமாக்கியது

கிளிநொச்சி மாவட்ட செயலக நலன்புரிச்சங்கத்தின் தலைவர் திரு.வே.வேல்நிதி அவர்களின் ஏற்பாட்டில் 2018 ஆம் ஆண்டிற்கான அரச திணைக்களங்களிற்கு இடையேயான அரச அதிபர் விளையாட்டுக் கிண்ண விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வு 18-12-2018 அன்று உருத்திரபுரம் விளையாட்டு கழகத்தில் வெகு விமர்சையாக இடம் பெற்றது. இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மாவட்ட செயலாளர் உயர் திரு சுந்தரம் அருமைநாயகம் அவர்களும் மேலதிக மாவட்ட செயலாளரும் மற்றும் பிரதேச செயலாளர்களும் ஒவ்வொரு திணைக்கள தலைவர்களும் பதவி நிலை உத்தியோகத்தர்களும் ஏனைய அலுவலக உத்தியோகத்தர்களும் பங்கு பற்றி சிறப்பித்தனர்

 அரச திணைக்களங்களிற்கு இடையேயான அரச அதிபர் விளையாட்டுக் கிண்ண விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட உதைபந்து கரப்பந்து கிரிக்கெட் வலைப்பந்து கரம் சதுரங்கம் பூப்பந்தாட்டம்கயிறிழுத்தல் மற்றும் மெய்வலுனர் போட்டிகளில் கலந்து கொண்டு பெற்ற புள்ளிகளின் வரிசையிலே கட்டடங்கள் திணைக்களம் 7  புள்ளிகளும் இலங்கை போக்குவரத்து சபை 10 புள்ளிகளையும் சுகாதாரத் திணைக்களம் 17 புள்ளிகளும் விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி திணைக்களம் 17  புள்ளிகளும் கண்டாவளைப்பிரதேச செயலகம் 17 புள்ளிகளும் பூநகரி பிரதேச செயலகம் 21 புள்ளிகளும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் 44  புள்ளிகளும் மாவட்ட செயலகம் 44 புள்ளிகளும் கரைச்சி பிரதேச செயலகம் 58 புள்ளிகளும் பெற்று கரைச்சி பிரதேச செயலகம் முதல் இடத்தைப் பெற்றுக்கொண்டது. இரண்டாம் இடத்தினை மாவட்ட செயலக அணி இரண்டாம் நிலையினையும் பெற்று அரச அதிபர் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.