DSCN9874 1

கிளிநொச்சி உருத்திரபுரத்தை சேர்ந்த செல்வி தினகராசா சோபிகா, செல்வி நடராசா வினுசா ஆகிய இரு பெண்கள் தேசிய  றோல் போல் அணியில் தெரிவாகி   21.02.2019 தொடக்கம் 24.02.2019 வரை இந்தியாவில்   இடம்பெற்ற ஆசிய கிண்ணபோட்டியில் றோல் போல் போட்டியில் இலங்கை அணியில் விளையாடி கிளிநொச்சிக்கு மட்டுமல்ல இலங்கை நாட்டுக்கே பெருமையை தேடித்தந்திருக்கிறார்கள். இப்போட்டியில் இலங்கை அணி மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன்  சிறந்த பேற்று காப்பாளர் என்ற விருதை செல்வி நடராசா வினுசா  என்பவர் பெற்றுக்கொண்டனர். இவர்களுக்கும் இவர்களை பயிறறுவித்த றோல் போல் பயிற்றுவிப்பாளர் கிளிநொச்சியை சேர்ந்த திரு. விக்ரர் சுவாம்பிள்ளை அவர்களுக்கும் கிளிநொச்சி மாவட்டம் சார்பாக  கிளிநொச்சி அரசாங்க அதிபர் திரு சுந்தரம் அருமைநாயகம் பாராட்டுகளை தெரிவித்தார்