கிளிநொச்சி மாவட்ட 2018 ஆம் ஆண்டிற்கான அரச திணைக்களங்களிற்கு இடையேயான அரச அதிபர் விளையாட்டுக் கிண்ணத்தினை கரைச்சி பிரதேச செயலகம் தன்வசமாக்கியது

கிளிநொச்சி மாவட்ட செயலக நலன்புரிச்சங்கத்தின் தலைவர் திரு.வே.வேல்நிதி அவர்களின் ஏற்பாட்டில் 2018 ஆம் ஆண்டிற்கான அரச திணைக்களங்களிற்கு இடையேயான அரச அதிபர் விளையாட்டுக் கிண்ண விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வு 18-12-2018 அன்று உருத்திரபுரம் விளையாட்டு கழகத்தில் வெகு விமர்சையாக இடம் பெற்றது. இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மாவட்ட செயலாளர் உயர் திரு சுந்தரம் அருமைநாயகம் அவர்களும் மேலதிக மாவட்ட செயலாளரும் மற்றும் பிரதேச செயலாளர்களும் ஒவ்வொரு திணைக்கள தலைவர்களும் பதவி நிலை உத்தியோகத்தர்களும் ஏனைய அலுவலக உத்தியோகத்தர்களும் பங்கு பற்றி சிறப்பித்தனர்

 அரச திணைக்களங்களிற்கு இடையேயான அரச அதிபர் விளையாட்டுக் கிண்ண விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட உதைபந்து கரப்பந்து கிரிக்கெட் வலைப்பந்து கரம் சதுரங்கம் பூப்பந்தாட்டம்கயிறிழுத்தல் மற்றும் மெய்வலுனர் போட்டிகளில் கலந்து கொண்டு பெற்ற புள்ளிகளின் வரிசையிலே கட்டடங்கள் திணைக்களம் 7  புள்ளிகளும் இலங்கை போக்குவரத்து சபை 10 புள்ளிகளையும் சுகாதாரத் திணைக்களம் 17 புள்ளிகளும் விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி திணைக்களம் 17  புள்ளிகளும் கண்டாவளைப்பிரதேச செயலகம் 17 புள்ளிகளும் பூநகரி பிரதேச செயலகம் 21 புள்ளிகளும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் 44  புள்ளிகளும் மாவட்ட செயலகம் 44 புள்ளிகளும் கரைச்சி பிரதேச செயலகம் 58 புள்ளிகளும் பெற்று கரைச்சி பிரதேச செயலகம் முதல் இடத்தைப் பெற்றுக்கொண்டது. இரண்டாம் இடத்தினை மாவட்ட செயலக அணி இரண்டாம் நிலையினையும் பெற்று அரச அதிபர் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.