dscn8807இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 71 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் கிளிநொச்சி  மாவட்ட செயலகத்தில் சிறப்புற இடம்பெற்றது. மாவட்ட  அரசாங்க அதிபர் தலைமையில் 71 ஆவது சுதந்திர தினத்தில் நாட்டினுடைய தேசிய கொடியினை  மாவட்ட அரசாங்க அதிபர் திரு சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் ஏற்றிவைத்தார் நிகழ்வில் மத தலைவர்கள், 57வது இராணுவ கட்டளை தளபதி, பிரதி பொலிஸ்மா அதிபர் சிரேஸ்ட பொலிஸ்அத்தியேட்சகர், அரச திணைகள தலைவர்கள், மாவட்ட  உத்தியோகத்தர்களும் பிரதேச செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள்,  ஆசிரியர்கள், மாணவர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். நிகழ்வில் திரு சுந்தரம் அருமைநாயகம் சிறப்புரை ஆற்றினார் மற்றும் கலை நிகழ்வுகள் மாற்றுவலுவுள்ளோர்களுக்கான உதவிப்பொருட்களும் பாடசாலை மாணவர்களுக்கு பள்ளி உபகரண பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் சிரமதான நிகழ்வும் இடம்பெற்றது

dscn8820dscn8790dscn9025dscn8891