கிளிநொச்சி மாவட்டம்

பிரதேச அமைவிடம்

கிளிநொச்சி மாவட்டம் இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ளது. இது 1237.11 சதுரக்கிலோமீற்றர் நிலப்பரப்பையும் 44.3 சதுரக்கிலோமீற்றர் நீர்ப்பரப்பையும் உள்ளடக்கியுள்ளது. சனத்தொகை அடர்த்தி சதுரக் கிலோ மீற்றருக்கு 96 பேர் ஆகும்.

கிளிநொச்சி மாவட்டம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி மாவட்டத்தின் அதிகார எல்லைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டம் 9 பாராளுமன்ற உறுப்பினர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளது. இம்மாவட்டம் கீழ்க்குறிப்பிடப்படும் எல்லைகளினால் சூழப்பட்டுள்ளது.

எல்லைகள்

வடக்கு - யாழ்ப்பாணம் மாவட்டம்

கிழக்கு மற்றும் தெற்கு -முல்லைத்தீவு மாவட்டம்

மேற்கு மற்றும் தெற்கு - மன்னார் மாவட்டம்

காலநிலையும் மழைவீழ்ச்சியும்

இம்மாவட்டம் வரண்ட, ஈரப்பதன் மற்றும் வெப்ப காலநிலைகளை கொண்டுள்ளத. இப்பிரதேசத்தில் வருடாந்த சராசரி மழைவீழ்ச்சி 1325 மில்லிமீற்றர் ஆகும். ,தில் 75% மழைவீழ்ச்சி புரட்டாதி தொடக்கம் மார்கழி வரையிலான காலப்பகிதியுள் வடகீழ் பருவக்காற்றின் மூலம் கிடைக்கப் பெறுகின்றது. வருடத்தின் மேலே சொல்லப்பட்டதை தவிர்ந்த காலப் பகுதிக்குள் வரண்ட வெப்பமுடையதாகக் காணப்படும். வருடத்தில் வரண்ட காலநிலை கொண்ட ஆனி தொடக்கம் ஆவணி வரையான காலப்பகுதி எலர் பாலப்பகுதியாகக் கருதப்படுகிறது. மாதாந்த சராசரி வெப்பநிலை வீச்சு 25 பாகை  தொடக்கம் 30 பாகை செல்சியஸ்  ஆகும்.

நிர்வாகப் பிரிவுகள்

இம் மாவட்டமானது 4 பிரதேசசெயலாளர் பிரிவுளையும் ​ 95 கிராம அலுவலர் பிரிவுகளையும் 329 கிராமங்களையும் கொண்டுள்ளது. நான்கு பிரதேசசெயலாளர் பிரிவுகளாவன கரைச்சி, கண்டாளை, பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி. இம் மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் 03 உள்ளுராட்சி அதிகார சபைகள் சேவைகளை வழங்கி வருகின்றன.

மண் மற்றும் இயற்கை வளம்

இம் மாவட்ட மண்ணானது வளத்துடன் கூடிய தேவையான கனியங்ளை தன்னகத்தே கொண்டிருப்பதால் எத்தகைய பயிர்களும் சிறப்பான வளர்ச்சிக்கு உகந்த்தாகவுள்ளது.

மண்ணின் கட்டமைப்பும் வகைகளும்

  • செம்மஞ்சள்                                             12.04%
  • மட்டத்துடன் கூடிய சற்று உயர்ந்தமேடு       27.96%
  • உவர் மண் 25.96%
  • வண்டல் மண்ணும்வேறுபட்ட இழை அமைப்புக்கொண்ட நீரோட்டம் 11.99%
  • கடற்கரை மணற்தோற்ற தரைமைப்பு 17.99%
  • மண்ணரிப்புத்தரை 04.06%