தொலைநோக்கு:

நவினமயப்படுத்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்தின் ஊடாக பயனுறுதி மிக்க மக்கள் சேவை வழங்கல். 

 

செயற்பணி:-

அரச கொள்கைகளுக்கமைவாக வினைத்திறனைப் பயன்படுத்தி சிறந்த ஒருங்கினைப்பின் மூலம் மாவட்டத்தின் அபிவிருத்தி    மற்றும் சமூக பண்பாட்டு விழுமியங்களை உயர்த்துதல்.

 

 இலக்குகள்:-

 • பாகுபாடற்ற நேர்மையான பயனுறுதிமிக்க மக்கள் சேவை வழங்கல்.
 • ஒரே பதவி நிலையில் உள்ள ஊழியர்கள் சமமாக மதிக்கப்படல்.
 • சூழலிற்கு நட்புரீதியான உற்பத்தியினைப் பயன்படுத்தல்.
 • இயலாமை முதியோருக்கு கண்ணியமான சேவை வழங்கல்.
 • அலுவலகத்தில் பின்பற்றப்படும் கோட்பாடுகள் மற்றும் பழக்கவழக்கங்களை ஊழியர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளலும் பின்பற்றலும்.
 • இலத்திரனியல் முறைமையினுடாக பொதுமக்களிற்கு இலகுவான சேவை வழங்குதல்.
 • காகிதாதிகளின் பாவனை குறைவான தரமான இலத்திரனியல் முறைமை.

நோக்கம்:-

 • தரவுகளை இலத்திரனியல் மயப்படுத்தல்.
 • வினைதிறனான வளப்பயன்பாடு.
 • யுத்ததினால் உடல் உளரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரம் மற்றும் இயல்பு நிலையை ஏற்படுத்தி கொடுத்தல்.
 • சனாதிபதி செயலகத்தின் தேசிய கொள்கைகளான போதைப்பொருள் தடுப்பு உணவு உற்பத்தி சிறுநீரக நோய்த்தடுப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பவற்றை மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தலும் மேற்பார்வை செய்தலும்.
 • மக்களின் இலகுவான சேவையை வழங்கக்கூடிய வகையில் அலுவலகத்தை மாற்றியமைத்தல்.
 • மக்களின் வாழ்க்கைத்தரத்தை தேசிய வாழ்க்கைத்தரத்துடன் இணைத்தல்.
 • வறுமையை கணிசமான அளவு குறைத்தல்.
 • வாழ்வாதார உதவிகள் மூலம் நிலைபேறான வருமான மட்டத்தை உறுதிப்படுத்தல்