meeting gov

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் முப்படைகள், போலீசார் மற்றும் அரச திணைக்களங்களின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கௌரவ ஆளுனர் அவர்களின் தலைமையில் 2019.09.12 ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலக பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது படைத்தரப்பு , பொலிஸார் , திணைக்களங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் ஒவ்வொருவர் அடங்கலாக மாவட்ட ரீதியிலான குழு நியமிக்கப்பட்டு அவர்கள் தனியார் காணிகளை அடையாளம் கண்டு இதுதொடர்பிலான மேலதிக விபரங்களை சேகரிக்குமாறும் குறிப்பிடப்பட்டது.

வடமாகாணத்தில் படைத்தரப்பு , பொலிஸார் மற்றும் திணைக்களங்கள் வசமுள்ள பொதுமக்கள் காணிகளின் உரிமையாளர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசித்துவருவார்களாயின் அவர்கள் உடனடியாக தமது காணிகளை பதிவு செய்யுமாறும் கௌரவ ஆளுநர் அவர்கள் இதன்போது தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்காந்தராசா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்கள், கிளிநொச்சி மற்றும் வன்னி படைகளின் கட்டளை அதிகாரிகள் உள்ளிட்ட பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

trophy1

2019 ஆம் ஆண்டுக்கான 13 ஆவது வடமாகாண விளையாட்டு விழா செப்டம்பர் மாதம் 07 மற்றும் 08 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதில் கிளிநொச்சி மாவட்டம் 28 தங்கப்பதக்கங்கள், 29 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 32 வெண்கல பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது.

பதக்கங்களின் விபரம் 

 இல  விளையாட்டு  பிரிவு  தங்கம்  வெள்ளி  வெண்கலம்
01  உதைபந்து   ஆண்  -  01 -
02  பெண்  -  01 -
03  கரப்பந்து  ஆண்  - 01 -
04  வலைப்பந்து  பெண்  - 01 -
05  கபடி  பெண்  - 01 -
06  கிரிக்கெட்  பெண்  - 01 -
07  எல்லே  பெண்  - 01 -
08 பூப்பந்து ஆண்  - - 01
09  மேசைப்பந்து    ஆண்  - 02 01
10  பெண்  01 02 01
11  கலப்பு  01 - -
12  கடற்கரை கரப்பந்து  ஆண்  - - 01
13  கராத்தே   ஆண்  02 03 05
14  பெண்  01 03 01
15  குத்துச்சண்டை   ஆண்  03 01 -
16  பெண்  01 - -
17  ரேக்வொண்டா   ஆண்  02 01 01
18  பெண்  01 - 04
19  ஜூடோ   ஆண்  03 02 03
20  பெண்  05 02 02
21  கடற்கரை கபடி  பெண்  - 01 -
22  சதுரங்கம்   ஆண்  - 01 -
23  பெண்  - 02 -
24  பளுதூக்கல்   ஆண்  - - 02
25  பெண்  - 02 -
26  மெய்வல்லுனர்   ஆண்  03 01 04
27  பெண்  04 01 04
  மொத்தம்   28 29 33

 

கிளிநொச்சி மாவட்டத்தின் வட மாகாண சாதனைகள் - 2019

  T.டென்சிகா

   800 மீற்றர் 

  2:28:4 செக்கன்

  T.டென்சிகா

  S.சீர்நிலா

  U.குயின்சி

  K.சரிதா

   4 x 400 மீற்றர்    4:26:7 செக்கன்
   K.பவீந்திரன்

  நீளம் பாய்தல் 

  சிறந்த தடைகள வீரர்

  7.01 மீற்றர் 

  924 புள்ளி

   T.டென்சிகா

 

  400 மீற்றர்  
  சிறந்த தடைகள வீராங்கனை

  1:01:00 செக்கன்

  804 புள்ளி

 

மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் கிளிநொச்சி மாவட்ட தொழில் நிலையமும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகங்களும் இணைந்து நடாத்திய தொழிற்சந்தை நிகழ்வு 03.09.2019 (செவ்வாய் ) அன்று கிளிநொச்சி மாவட்ட செயலக வளாகத்தில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி)  திரு.ந.திருலிங்கநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

தொழிற்சந்தைக்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் கலந்து கொண்டு சம்பிரதாய பூர்வமாக தொழிற்சந்தையினை ஆரம்பித்து வைத்தார்.

மனிதவலுத் திணைக்கள துறைசார் பணிப்பாளர்களான திரு.லலித் குணவர்தன ,ஜஸஸ்மி ஹிங்குருவே மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிரதேச செயலாளர்கள் ,திட்டமிடல் பணிப்பாளர் ,பிரதம உள்ளக கணக்காளர் ,கிளிநொச்சி மாவட்ட பிரதம கணக்காளர் மற்றும் உயர் அதிகாரிகள் விருந்தினர்களாக கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.

jobfair03

தொழிற்சந்தை நிகழ்விற்கு வவுனியா,முல்லைத்தீவு,மன்னார்,யாழ்ப்பாணம் ஆகிய மாவட்ட செயலகங்களை சேர்ந்த மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் தங்கள் சேவைகளை வழங்கியிருந்தனர்.

அன்றைய தினம் பல்வேறு துறை சார்ந்த தொழில் வழங்கும் 30 நிறுவனங்கள் தொழிற்சந்தைக்கு வருகை தந்திருந்ததுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலை தேடும் இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டு உற்பத்தி, சேவை மற்றும் பயிற்சி சார்ந்த துறைகளுக்கான நேர்முகத்தேர்வில் பங்கு பற்றி பயன் பெற்றனர்.

jobfair6

மேலும் மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் தொழில் வழிகாட்டல், தனிநபர் விழிப்புணர்வு வேலை தேடுனர்களை பதிவு செய்தல் போன்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

சமூக வலுவூட்டல் நலன்புரி மற்றும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சினால் 142 மில்லியன் ரூபா மொத்த மதிப்பீட்டில் அங்கவீனமுற்ற நபர்களுக்கான வாழ்க்கைத் தொழிற்பயிற்சி நிலையம் 2019 ஐப்பசி மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.இங்கு இலத்திரனியல்,மின்னியல், தையல், வாகன திருத்தம் போன்ற பயிற்சி நெறிகளுடன் மேலும் ஏனைய புதிய பயிற்சி நெறிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.இதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) திரு.திருலிங்கநாதன் அவர்களின் தலைமையில் பொன்னகர் தொழில் பயிற்சி நிலையக் கட்டிடத்தில் 24.08.2019 அன்று நடைபெற்றது. இதில் சமூக வலுவூட்டல் நலன்புரி மற்றும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

thirukural 1
 
(26.08.2019)
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் நெறிப்படுத்தலின் கீழ் திருக்குறள் பெருவிழா - 2019 வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும்   கிளிநொச்சி மாவட்ட செயலகம் என்பவற்றின் இணைந்த செயற்பட்டில்  கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சுந்தரம் அருமைநாயகம் அவர்களின் தலைமையில் 2019.08.26 அன்று  சிறப்பாக நடாத்தப்பட்டது.
 
விழாவில் சிறப்பு  விருந்தினர்களாக திரு.வே .இறைபிள்ளை (கிளிநொச்சி தமிழ்ச்சங்கம்), திரு.அ .சண்முகநாதன் (வாழ்நாள் பேராசிரியர் ), திரு.கு.பாலசண்முகன்(விரிவுரையாளர் ஆசிரிய பயிற்சிக்கலாசாலை,கோப்பாய்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
காலை 9 மணிக்கு கரைச்சி பிரதேச சபைக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து அலங்கார ஊர்தி அசைந்துவர பிரதச சபையிலிருந்து கூட்டுறவு மண்டபம் வரை விருந்தினர்களுடன் கிளிநொச்சி மக்களும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.அதனை தொடர்ந்து  விழா மண்டபத்தில் நிகழ்வுகள் மங்கல  விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி தமிழ் தாய் வாழ்த்து மற்றும் திருக்குறள் கடவுள் வாழ்த்து இசைக்கப்பட்டது.வரவேற்புரை திரு.ந .திருலிங்கநாதன் (மேலதிக அரசாங்க அதிபர் -காணி)அவர்களால் வழங்கப்பட்டது.பின்னர் தொடக்கவுரை திரு.த .முகுந்தன்(பிரதேச செயலர்,கரைச்சி) அவர்களால் வழங்கப்பட்டது.பின்னர் தலைமை உரை மற்றும் சிறப்புரையுடன் பிரதம விருந்தினர் உரையும்  இடம்பெற்று கலை நிகழ்வுகளை  தொடர்ந்து நன்றி உரையுடன் விழா நிறைவடைந்தது.
 
DSCN2144
 
ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டிடல் அமைச்சின் அனுசரணையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் 2019.07.18 அன்று மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி உருத்திரபுரம் விளையாட்டு கழக  மைதானத்தில் நடாத்தப்பட்டது.
போட்டியின்  பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு .சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் கலந்து கொண்டார்.இதில் 200 இற்கும்  மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்த கொண்டதுடன் 52 வகையான விளையட்டுக்களும்  இடம்பெற்றன.நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது.