சமூக வலுவூட்டல் நலன்புரி மற்றும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சினால் 142 மில்லியன் ரூபா மொத்த மதிப்பீட்டில் அங்கவீனமுற்ற நபர்களுக்கான வாழ்க்கைத் தொழிற்பயிற்சி நிலையம் 2019 ஐப்பசி மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.இங்கு இலத்திரனியல்,மின்னியல், தையல், வாகன திருத்தம் போன்ற பயிற்சி நெறிகளுடன் மேலும் ஏனைய புதிய பயிற்சி நெறிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.இதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) திரு.திருலிங்கநாதன் அவர்களின் தலைமையில் பொன்னகர் தொழில் பயிற்சி நிலையக் கட்டிடத்தில் 24.08.2019 அன்று நடைபெற்றது. இதில் சமூக வலுவூட்டல் நலன்புரி மற்றும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.