மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் கிளிநொச்சி மாவட்ட தொழில் நிலையமும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகங்களும் இணைந்து நடாத்திய தொழிற்சந்தை நிகழ்வு 03.09.2019 (செவ்வாய் ) அன்று கிளிநொச்சி மாவட்ட செயலக வளாகத்தில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி)  திரு.ந.திருலிங்கநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

தொழிற்சந்தைக்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் கலந்து கொண்டு சம்பிரதாய பூர்வமாக தொழிற்சந்தையினை ஆரம்பித்து வைத்தார்.

மனிதவலுத் திணைக்கள துறைசார் பணிப்பாளர்களான திரு.லலித் குணவர்தன ,ஜஸஸ்மி ஹிங்குருவே மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிரதேச செயலாளர்கள் ,திட்டமிடல் பணிப்பாளர் ,பிரதம உள்ளக கணக்காளர் ,கிளிநொச்சி மாவட்ட பிரதம கணக்காளர் மற்றும் உயர் அதிகாரிகள் விருந்தினர்களாக கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.

jobfair03

தொழிற்சந்தை நிகழ்விற்கு வவுனியா,முல்லைத்தீவு,மன்னார்,யாழ்ப்பாணம் ஆகிய மாவட்ட செயலகங்களை சேர்ந்த மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் தங்கள் சேவைகளை வழங்கியிருந்தனர்.

அன்றைய தினம் பல்வேறு துறை சார்ந்த தொழில் வழங்கும் 30 நிறுவனங்கள் தொழிற்சந்தைக்கு வருகை தந்திருந்ததுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலை தேடும் இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டு உற்பத்தி, சேவை மற்றும் பயிற்சி சார்ந்த துறைகளுக்கான நேர்முகத்தேர்வில் பங்கு பற்றி பயன் பெற்றனர்.

jobfair6

மேலும் மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் தொழில் வழிகாட்டல், தனிநபர் விழிப்புணர்வு வேலை தேடுனர்களை பதிவு செய்தல் போன்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.