புதிய அரசியல் யாப்பு தயாரித்தல் தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு கிளிநொச்சியில் நடைபெற்றது

புதிய அரசியல் அமைப்பினைத் தயாரித்தல் தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அரசாங்க உத்த்யோகத்தர்களுக்கு அறிவூட்டும் கருத்தரங்கு நேற்று (2017.03.07)  கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் அரசாங்க அதிபர் திரு சுந்தரம் அருமைநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

புதிய அரசியல் அமைப்பினைத் தயாரித்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சித்திட்டத்திற்கான ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தினால் ஒவ்வொரு மாவட்டத்திலும்,   பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட மாவட்டத்தில் கடமைபுரியும் சுமார் 500 அரசாங்க உத்தியோகத்தர்களை அறிவூட்டும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இன்று நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட பயிலரங்கில் அரசியல் அமைப்புச் சீர்திருத்தம் தொடர்பான கருத்தறியும் குழுவின் செயலாளர் திரு வின்சன் பத்திராஜ, குழுவின் உறுப்பினர் திரு சந்திரகாசன் இளங்கோவன் மற்றும் யாழ் பல்கலைக் கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளர் திருமதி கோசலை மதன் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பாக விளக்கமளித்தனர். இதன் போது கலந்து கொண்ட உத்தியோகத்தர்களால்  அரசியல் அமைப்புத் தொடர்பாக வினவப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதேச செயலாளர்கள்,  மாவட்டச் செயலக, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள்   மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அரச  திணைக்களங்களின்  உத்தியோகத்தர்கள் என 500க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 
Sinhala (Sri Lanka)Tamil-Sri LankaEnglish (United Kingdom)
District Secretary


Suntharam Arumainayaham

Additional District Secretary

Sivapathasuntharam Sathiyaseelan

scheduled Events
July 2017
S M T W T F S
25 26 27 28 29 30 1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31 1 2 3 4 5