கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் குடியரசுதின நிகழ்வுகள் நடைபெற்றன

இலங்கை குடியரசு தின நிகழ்வுகள் இன்று காலை (22.05.2017) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றதன.

தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பமான இந் நிகழ்வில்  அரசாங்க அதிபர் அவர்கள் தனது தலமை உரையில், 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ம் திகதியிலிருந்து இலங்கை பிரித்தானிய காலணித்துவத்திலிருந்து மீண்ட போதிலும் தொடந்தும் பிரித்தானிய அரசின் கிரீடத்தின் கீழ் டொமினிக் நிலைமையுடைய சுகந்திரமொன்று மட்டும் உரித்தாக இருந்தது. ஆனால் 1972ஆம் ஆண்டின் குடியரசுர அசியல் யாப்புடன் இலங்கை மக்களுக்குப் பொறுப்பு கூறுகின்ற முழுமையான இறைமையுடைய மற்றும் சுகந்திர அரசாக ஆகியது. இக் குடியரசு உருவாவதற்கான சந்தர்ப்பங்கள், இவற்றுக்காக தலைமையேற்ற தலைவர்களின் பங்களிப்புக்கள், இலங்கை குடியரசு ஆகியமையால் நாட்டு மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதங்கள் போன்றவை பற்றி குறிப்பிட்டார்.

அடுத்து  உதவி திட்டப்பணிப்ப்பளர் திரு. கேதீஸ்வரன் அவர்களும் குடியரசு தினம் பற்றி உரையாற்றினார். இந் நிகழ்வில் அனைத்து செயலக உத்தியேகத்தர்களும் கலந்து கொண்டனர்.

 

 
Sinhala (Sri Lanka)Tamil-Sri LankaEnglish (United Kingdom)
District Secretary


Suntharam Arumainayaham

Additional District Secretary

Sivapathasuntharam Sathiyaseelan

scheduled Events
July 2017
S M T W T F S
25 26 27 28 29 30 1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31 1 2 3 4 5