கிளிநொச்சி கச்சேரியை பார்வையிட்ட முல்லைத்தீவு கச்சேரி உத்தியோகத்தர்கள்

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினை முல்லைத்தீவு செயலக உத்தியோகத்தர்கள் நேற்றையதினம் (7.2.2017) பார்வையிட்டுச்சென்றுள்ளனர்.

அகில இலங்கை ரீதியில் 2016ம் ஆண்டு நடைபெற்ற உற்பத்தி திறன் போட்டியில் கிளிநொச்சி மாவட்ட செயலகமானது முதலாவது தடவையாக பங்குபற்றி 2ம் இடத்தினை பெற்றுக்கொண்டமையினையிட்டு அண்மைக்காலமாக பல்வேறு அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் பார்வையிட்டுவருகின்றார்கள்.

அந்தவகையில் நேற்றையதினம் (7.2.2017) மாவட்ட செயலக உற்பத்தி திறன் செயற்பாடுகளை பார்வையிடுவதற்காகவும் செயலக பணியாட்தொகுதியினருடனான அனுபவப்பகிர்வினை மேற்கொள்ளும் பொருட்டும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி.ரூபவதி கேதீஸ்வரன் அவர்களது தலைமையில் 60ற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கற்கைச்சுற்றுலாவினை மேற்கொண்டு அலுவலக உற்பத்திதிறன் செயற்படுகளை பார்வையிட்டதுடன் அலுவலர்களுடன் கலந்துரையாடி அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.


 
Sinhala (Sri Lanka)English (United Kingdom)
மாவட்டச்செயலாளர்

சுந்தரம் அருமைநாயகம்