கிளிநொச்சியில் வரட்சிப்பாதிப்பு மற்றும் நிவாரணங்களுக்கான பதிவுகள் மேற்கொள்ள நடவடிக்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது நிலவிவரும் வரட்சியின் பாதிப்புகள் மற்றும் நிவாரணம் வழங்குவதற்கான பதிவுகள் மேற்கொள்ள ஆரம்பிக்குமாறு நேற்று (21.2.2017) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வரட்சி தொடர்பான கலந்துரையாடலில் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்களினால் பணிக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயம் அல்லது அதனை அண்டிய தொழில்களான கால்நடை வளர்ப்பு, நன்னீர் மீன்பிடி போன்ற தொழில்களில் ஈடுபடும் மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கும் நோக்குடன் பாதிப்புகள் தொடர்பான பதிவுகளை மேற்கொள்ளுமாறும், இப்பதிவுகளை மேற்கொள்ள கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர்களை ஈடுபடுத்துவதுடன் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் உதவியினை பெற்றுக்கொள்ளுமாறும் அரச அதிபரினால் கோரப்பட்டது. இக்கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர், அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர், கமநல சேவை உதவி ஆணையாளர், கடள்வள நீரியல்வள திணைக்கள உதவிப்பணிப்பாளர் மற்றும் ஏனைய திணைக்கள அதிகாரிகள் பங்குபற்றினார்கள்.


 
Sinhala (Sri Lanka)Tamil-Sri LankaEnglish (United Kingdom)
District Secretary


Suntharam Arumainayaham

Additional District Secretary

Sivapathasuntharam Sathiyaseelan

scheduled Events
July 2017
S M T W T F S
25 26 27 28 29 30 1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31 1 2 3 4 5