கிளி மாவட்ட செயலகத்தினை பார்வையிட்டனர் புத்தள மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்

 

கிளிநொச்சி மாவட்ட செயலக உற்பத்தி திறன் செயற்பாடுகளை புத்தள மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இன்று (23.02.2017) பார்வையிட்டுள்ளனர்.

தேசிய உற்பத்தி திறன் செயலகத்தினால் அரச அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் என பல நிறுவனங்களுக்கிடையே ஆண்டு தோறும் உற்பத்தி திறன் போட்டி நடைபெற்று வருகின்றது. இப் போட்டியில் 2015ம் ஆண்டு கிளிநொச்சி மாவட்ட செயலகம் முதன்முறையாக போட்டியிட்டு அகில இலங்கை ரீதியில் 2ம் இடத்தை பெற்றுக்கொண்டமையினையிட்டு அண்மைக்காலமாக அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் என பல அமைப்புகள் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினை பா்வையிட்டு வருகின்றார்கள்.

இந்த வகையில் இன்று மாவட்ட செயலகத்தின் உற்பத்தி திறன் செயற்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கும் வினைத்திறனுடன் கூடிய சேவைகள் என்பவற்றை பார்வையிடுவதற்காகவும், செயலக பணியாட் தொகுதியுடனான அனுபவ பகிர்வினை மேற்கொள்ளும் பொருட்டும்  புத்தள மாவட்ட அரசாங்க அதிபர் திரு.என்.எச்.எம் சித்தராநந்த அவர்களது தலைமையில் 40ற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டு அலுவலக உற்பத்தி திறன் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன் அலுவலர்களுடன் கலந்துரையாடி அனுபவங்களையும் பெற்றுக்கொண்டனர். மேற்படி உற்பத்தி திறன் போட்டியில் அதே ஆண்டில் புத்தள மாவட்ட செயலகம் 3ம் இடத்தினை பெற்றக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 
Sinhala (Sri Lanka)Tamil-Sri LankaEnglish (United Kingdom)
District Secretary


Suntharam Arumainayaham

Additional District Secretary

Sivapathasuntharam Sathiyaseelan

scheduled Events
September 2017
S M T W T F S
27 28 29 30 31 1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30