RIGHT TO INFORMATION

In accordance with the RTI Act 12 of 2016

Designated officer

Name: Mr.S.Arumainayaham

Designation:- District Secretary

Phone No: 0212283965

Fax No: 0212283966

Information Officer

Name: Mr.T.Prunthakaran

Designation:- Asst.District Secretary

Phone No: 0212285351

Fax No: 0212285759


 




கிளிநொச்சியில் ஓங்கி ஒலித்தது பெண்களுக்கான குரல்

There are no translations available.

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு பெண்களின் உரிமையை பாதுகாப்பதற்காவும் வலுவுட்டுவதற்காகவும் பெண்களுக்கான குரலினை ஓங்கி ஒலிக்கச் செய்வதற்கான பிரச்சார நடைபவனி இன்று (1.3.2017) கிளிநொச்சியில் இடம்பெற்றது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அனுசரனையுடன் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட குடும்ப அலகினூடாக  மகிழ்ச்சியான சமூகத்தினை உருவாக்குவதன் முக்கியத்துவத்தினை உணர்த்தும் வகையில் ”மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையின் பெறுமதிக்கு ஒரு புதிய அர்த்தத்தினைக்கொடுத்தல்” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற நடைபவனியானது கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகி ஏ9 வீதியுடாக டிப்போ சந்திவரை சென்று அங்கு ஒன்றுகூடலும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினாராக கலந்து கொண்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் தனது உரையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 7000ற்கும் மேற்பட்ட பெண்தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளனர் அவர்களில் 3500ற்கும் மேற்பட்ட விதைவைகள் தமது வாழ்க்கையினை பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து பல சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பாதுகாப்பினை வலுவூட்டவும் இவர்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்கவும், பெண்களுக்கான சமத்துவத்தினை வெளிப்படுத்தவும் இந்நடைபவனி அமைந்தது என தெரிவித்தார். தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வாழ்வின் எழுச்சி பணிப்பாளர் திருமதி ஆரணி தவபாலன் பெண்கள் உரிமை மற்றும் வலுவூட்டல் தொடர்பில் சிறப்புரை ஆற்றினார்

 

இந் நடைபவனியில் உள்ளுராட்சி அமைப்புகளில் பெண்களுக்கான 25% மான பிரதிநிதித்துவதத்தினை உறுதிப்படுத்துவோம் ”, ”நீங்கள் வெளிநாடுகளில் சிந்தும் வியர்வைதான் எங்கள் அன்னியச் செலாவணி” , ”தைக்கும் பெண்களே! எங்களுடைய வெளிநாட்டு வருமானம், ” தொல்லைகள் வன்முறைகள் போதைவஸ்து  அற்ற குடும்பமாக வாழ்வோம், பலமிக்க நாட்டை உருவாக்குவோம், பெண்களை வலுப்படுத்துவோம், நாளைய நாளை அழகாக்குவோம்” போன்ற வாசகங்கள் பெறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மேலதிக அரசாங்க அதிபர் சி.சத்தியசீலன், கரைச்சி பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன், உதவி மாவட்ட செயலாளர் த.பிருந்தாகரன், திடடமிடல் பணிப்பாளர் ச.மோகனபவன், பிரதம கணக்காளர் கில்பேர்ட்குணம், மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அமைப்புகள், முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர். நாடளாவிய ரீதியில் சகல மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் இந்நடைபவனி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


 
Sinhala (Sri Lanka)Tamil-Sri LankaEnglish (United Kingdom)
மாவட்டச்செயலாளர்


சுந்தரம் அருமைநாயகம்

மேலதிக மாவட்டச் செயலாளர்

சிவபாதசுந்தரம் சத்தியசீலன்

scheduled Events
November 2017
S M T W T F S
29 30 31 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 1 2