பயிர்ச்செய்கைக்கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட பிரமந்தனாறுகுளம் மற்றும் கனகாம்பிகைக்குள பயிர்ச்செய்கைக்கூட்டம் 28.02.2017 அன்று  மற்றும் கனகாம்பிகை குள பொதுநோக்கு மண்டபங்களில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சுந்தரம் அருமைநாயகம் அவர்களது தலைமையில் பிரமந்தனாறு பொதுநோக்கு மண்டபத்தில் காலை 10.00மணியளவில் இடம்பெற்ற பிரமந்தனாறுகுள பயிர்ச்செய்கை தொடர்பான கூட்டத்தில் குள நீர்மட்டமானது 8”4” ஆக உள்ளதாகவும் எனவே 450 ஏக்கரில் உப உணவுப்பயிர்களான பயறு, நிலக்கடலை, கௌப்பி, எள்ளு போன்றவற்றை பயிரிடலாம் என தீர்மானிக்கப்பட்டது. நீர்விநியோகமானது 15.3.2017 இல் ஆரம்பிக்கப்பட்டு 15.06.2017இல் அல்லது குளத்தின் நீர்மட்டமானது 3“ வரும் வரை இடம்பெறும் எனவும், உபஉணவு பயிர் தவிர்ந்த பயிர்களுக்கு நீர்ப்பாசனம் பயன்படுத்தப்பட்டால் அவர்களுக்கான நீர் விநியோகம் ரத்து செய்யப்படும், கால்நடைகளை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் 15.3.2017 இல் இருந்து 5.10.2017 வரை நடைமுறையிலிருக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட விவசாயப்பணிப்பாளர், கண்டாவளை பிரதேச செயலாளர், நீர்ப்பாசன பொறியியலாளர், பிரதிப்பணிப்பணிப்பாளர்- விவசாயதிணைக்களம்(விதைகள்), விவசாய காப்புறுதி திணைக்கள உதவிப்பணிப்பாளர் மற்றும் கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

கனகாம்பிகைகுள பயிர்ச்செய்கைக்கூட்டமானது கனகாம்பிகை குள பொதுநோக்கு மண்டபத்தில் 02.00மணியளவில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கனகாம்பிகைகுள  நீர்மட்டமானது தற்போது 9”5” ஆக உள்ளதாகவும் எனவே 260 ஏக்கரில் உப உணவுப்பயிர்களை பயிரிடலாம் என தீர்மானிக்கப்பட்டது. நீர்விநியோகமானது 12.3.2017 இல் ஆரம்பிக்கப்பட்டு 30.09.2017இல் அல்லது குளத்தின் நீர்மட்டமானது 3“ வரும் வரை இடம்பெறும் எனவும்,கால்நடைகளை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் 15.3.2017 இல் இருந்து 5.10.2017 வரை நடைமுறையிலிருக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் கரைச்சி பிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட விவசாயப்பணிப்பாளர், நீர்ப்பாசன பொறியியலாளர், பிரதிப்பணிப்பணிப்பாளர்- விவசாயதிணைக்களம்(விதைகள்), விவசாய காப்புறுதி திணைக்கள உதவிப்பணிப்பாளர் மற்றும் கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

 
Sinhala (Sri Lanka)Tamil-Sri LankaEnglish (United Kingdom)
District Secretary


Suntharam Arumainayaham

Additional District Secretary

Sivapathasuntharam Sathiyaseelan

scheduled Events
April 2017
S M T W T F S
26 27 28 29 30 31 1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 1 2 3 4 5 6