News & Events

”நிலமெகவர” 2017

காணிப்பிணக்குகளை தீர்ப்பதற்கான நடமாடும் சேவை

”நிலமெகவர” ஜனாதிபதியின் மக்கள் சேவையின் தேசிய திட்டத்திற்கு அமைவாக காணி அமைச்சும்,காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட கரைச்சி பிரதேசத்திற்குற்பட்ட  காணிப்பிணக்குகளைத் தீர்ப்பதற்கான நடமாடும் சேவை கரைச்சி பிரதேச செயலகத்தில் இன்று(24.04.2017) கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு சுந்தரம் அருமைநாயகம் அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இந்நடமாடும் சேவையில் கரைச்சி பிரதேசத்திற்குட்பட்ட 60 வரையான காணிப்பிரச்சினைகள் ஆராயப்பட்டன.

கண்டாவளை, பளை, பூநகரி  ஆகிய பிரதேச பிரிவுகளுக்குரிய இந் நடமாடும் சேவை நாளையதினம்(25.04.2017) கண்டாவளை, பளை, பூநகரி  ஆகிய பிரதேச செயலகங்களில் இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற புதுவருட நிகழ்வுகள்

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தமிழ்,சிங்கள புத்தாண்டை முன்னிட்டு  மாவட்ட செயலக நலன்புரிச்சங்க ஏற்பாட்டில்  நலன்புரிச்சங்க தலைவரும் மேலதிக மாவட்ட செயலாளருமாகிய திரு சி.சத்தியசீலன் அவர்களின் தலைமையில் இன்றையதினம்(17.04.2017) புதுவருட நிகழ்வுகள் இடம் பெற்றது. இந்நிகழ்வின் மாவட்ட அரச அதிபர் திரு.சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் கலந்துகொண்டு அனைவருக்கும் ஏவிளம்பி புதுவருட வாழ்த்துகளை தெரிவித்ததோடு  மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவதற்கு இவ்வாண்டு சிறப்பாக அமையவேண்டுமெனவும் வாழ்த்துகளை தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து புதுவருட பாரம்பரிய நிகழ்வான கைவிசேடம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

 
More Articles...
Sinhala (Sri Lanka)Tamil-Sri LankaEnglish (United Kingdom)
District Secretary


Suntharam Arumainayaham

Additional District Secretary

Sivapathasuntharam Sathiyaseelan

scheduled Events
April 2017
S M T W T F S
26 27 28 29 30 31 1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 1 2 3 4 5 6