News & Events

சர்வதேச றோல்போல் போட்டிக்கு கிளிநொச்சியில் இருவர் தெரிவு

 

சர்வதேச றோல்போல் விளையாட்டு போட்டியில் இலங்கை அணி சார்பாக போட்டியிடுவதற்காக கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி.சிறி.திவ்யா , செல்வி வி.துலக்சினி ஆகிய இரு வீராங்கனைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

56 நாடுகள் போட்டியிடும் சர்வதேச றோல்போல் போட்டியானது இவ்வாண்டு பெப்ரவரி 17ம் திகதி தொடக்கம் 23ம் திகதி வரை பங்களாதேஸ் நாட்டில் டாக்கா நகரில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இலங்கை றோல்போல் பெண்கள் அணியும் போட்டியிடவுள்ளது. 9 வீராங்கனைகளை கொண்ட இவ்வணியில் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து இரண்டு வீராங்கனைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

போட்டிக்கு செல்லும் வீராங்கனைகளை நேற்றையதினம் (14.02.217) மாவட்ட அரசாங்க அதிபா் திரு சுந்தரம் அருமைநாயகம் அவா்கள் வாழ்த்தி அனுப்பியதுடன் வீராங்கனைகளுக்கான பயணத்திற்குரிய விமான ரிக்கற் கொடுப்பனவுகள் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தால் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

கிளிநொச்சியில் பேரூந்து நிலையம் அமைப்பது தொடர்பில் விசேட கூட்டம்

கிளிநொச்சி மாவட்டத்திற்கான பேரூந்து நிலையம் அமைப்பது தொடர்பிலான விசேட கூட்டம் நேற்றையதினம்( 14.02.2017) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில்  முற்பகல் 9.30 மணியளவில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் கௌரவ சிவஞானம் சிறிதரன் பா.உ, கௌரவ அங்கஞன் இராமநாதன் பா.உ கௌரவ வடமாகண சா உறுப்பினர்கள், வீதி போக்குவரத்து அதிகாரசபை தலைவர், பிரதி பொலிஸ்மா அதிபர், கிளிநொச்சி மாவட்ட தலைமையக பொலிஸ் அதிகாரி போன்றோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை கலந்துரையாடலை தொடர்ந்து கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகாமையில் பேரூந்து நிலையம் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டனர்


 
More Articles...
Sinhala (Sri Lanka)Tamil-Sri LankaEnglish (United Kingdom)
District Secretary


Suntharam Arumainayaham

Additional District Secretary

Sivapathasuntharam Sathiyaseelan

scheduled Events
May 2017
S M T W T F S
30 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31 1 2 3