News & Events

சிவ ஆராதனையும் பிரார்த்தனைப்பவணியும்

 

ஓம் நமசிவாய சிவ ஆராதனைபயும் பிரார்த்தனைப்பவணியும் 15.2.2017ம் திகதி கிளிநொச்சி A9 வீதியில் அமைந்துள்ள பிள்ளளையார் ஆலயத்திலிருந்து கிளிநொச்சி கந்தசாமி ஆலயம் வரை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கடந்தகால அசாதாரண சூழ்நிலைகளினால் உளரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மன ஆறுதல் கிடைப்பதற்காகவும், மாணவர்களின் கல்வி உயர்வுக்காகவும், இளையோர்களின் நல்லொழுக்க நல்வாழ்வுக்காகவும், பெண்கள் மற்றும் சிறார்களின் பாதுகாப்பிற்காகவும், விவசாய வியாபார பொருளாதாரம் உயர்வடையவும், அசாதாரண சூழ்நிலைகளினால் மரணித்த மக்களின் ஆத்ம சாந்திக்காகவும் இன,மத,பேதமின்றி அனைவரது நல்வாழ்வு வேண்டியும் இவ் ஆராதனைப்பிரார்த்தனை நடை பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட செயலகமும் யாழ்ப்பாண வீணாகான குருபீடமும் இணைந்து ஏற்பாடு செய்த இந் நிகழ்வில் கிளிநொச்சி உதவி மாவட்டச் செயலாளர் திரு.த.பிருந்தாகரன், கிளிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.முருகவேல் மற்றும் குருபீட சிவஸ்ரீ சபா.வாசுதேவகுருக்கள் மற்றும் சிவாச்சாரியர்கள், உத்தியோகத்தர்கள், இந்து அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள், பக்த அடியார்கள் என ஏராளமானோர் கலந்து வேத திருமுறை பாராயணம் ,பஜனை என்பன நிகழ்த்தப்பட்டு இறுதியாக நிகழ்வில் கலந்து கொண்டோர் அனைவரும் தமது கைகளினால் சிவலிங்க பெருமானுக்கு திரு மஞ்சன அபிசேகமும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களால் பாரம்பரிய கலாசாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலைநிகழ்வுகளும் நிகழ்த்தப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

கிளிநொச்சியில் டெங்கு தீவிரமாக பரவக்கூடிய அபாயநிலை

மாவட்ட மக்களுக்கு அரச அதிபர் வேண்டுகோள்


கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலானது மிகத்தீவிரமாக பரவக்கூடிய அபாயநிலை அவதானிக்கப்பட்டுள்ளது என அரசாங்க அதிபர் திரு.சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பல மாவட்டங்களில் வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சலானது தற்போது கிளிநொச்சி மாவட்டத்திலும் கால்பதித்துள்ளது. 2017ம் வருடத்தின் முதல் 43 நாட்களில் கிளிநொச்சியின் நான்கு பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து 126 நோயாளர்கள் டெங்கு காய்ச்சல் காரணமாகச் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களுள் அனேகர் வெளிமாவட்டங்களில் பணி, கல்வி நடவடிக்ககைகள் மற்றும் பிற தேவைகளுக்காகச் சென்று தங்கியிருந்த வேளையில் நோய்த்தொற்றுக்கு ஆளாகிய நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு திரும்பியிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

கண்ணகைபுரம், கிராஞ்சி, கல்மடுநகர், புன்னைநீராவி, தர்மபுரம், அம்பாள்குளம், பாரதிபுரம், கோணாவில், மலையாளபுரம், பிரமந்தனாறு, ஆணைவிழுந்தான், கிருஸ்ணபுரம், இராமநாதபுரம், சாந்தபுரம், வேரவில், அம்பாள்நகர், கணேசபுரம், கண்டாவளை, கல்லாறு, மாவடியம்மன், மாயவனூர், நாச்சிக்குடா, நல்லூர், பரமன்கிராய், பெரியகுளம், பெரியபரந்தன், செல்வநகர், ஸ்கந்தபுரம், உருத்திரபுரம் கிழக்கு, உதயநகர் மேற்கு, வட்டகச்சி ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் இருந்தே ஒன்றிற்கு மேற்பட்ட டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளார்கள்

எனவே உயிர்க்கொல்லி டெங்கு நோயிலிருந்து மாவட்ட மக்களை பாதுகாப்பதற்காக மாவட்டம் முழுவதும் டெங்கு குடம்பிகள் மற்றும் டெங்கு நுளம்புகள் வாழக்கூடிய இடங்களை இனங்கண்டு அழிக்கும் நோக்குடன் சிரமதான நடவடிக்ககைகள் பிரதேச செயலாளர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகளது ஒழுங்கமைப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

வீடுவீடாகச் சென்று டெங்கு நுளம்பு வளரும் இடங்களை இனங்கண்டு அழித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாடசாலைகள் மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களை சுத்திகரித்தல் ஆகிய நடவடிக்கைகள் மாவட்டம் முழுவதும் முன்னெடுக்ககப்படவுள்ளது.

இதற்காக மக்கள் ஒவ்வவொருவரும் தம்மால் இயன்ற பங்களிப்பை வழங்கி மாவட்ட மக்களின் உயிர்களை காக்க உதவுமாறு அரச அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 
More Articles...
Sinhala (Sri Lanka)Tamil-Sri LankaEnglish (United Kingdom)
District Secretary


Suntharam Arumainayaham

Additional District Secretary

Sivapathasuntharam Sathiyaseelan

scheduled Events
July 2017
S M T W T F S
25 26 27 28 29 30 1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31 1 2 3 4 5