News & Events

மன்னார் வலயக்கல்வி உத்தியோகத்தர்கள் கிளிநொச்சி மாவட்ட செயலக உற்பத்தி திறன் செயற்பாடுகளை பார்வையிட்டனர்

கிளிநொச்சி மாவட்ட செயலக உற்பத்தி திறன் செயற்பாடுகளை மன்னார் வலயக்கல்விப்பணிமனையை சேர்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் மன்னார் கல்வி வலய பாடசாலை அதிபர்கள் 3.04.2017 அன்று பார்வையிட்டு சென்றுள்ளனர்.

தேசிய உற்பத்தி திறன் செயலகத்தினால் அரச அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் என பல நிறுவனங்களுக்கிடையே ஆண்டு தோறும் உற்பத்தி திறன் போட்டி நடைபெற்று வருகின்றது. இப் போட்டியில் 2015ம் ஆண்டு கிளிநொச்சி மாவட்ட செயலகம் முதன்முறையாக போட்டியிட்டு அகில இலங்கை ரீதியில் 2ம் இடத்தை பெற்றுக்கொண்டமையினையிட்டு அண்மைக்காலமாக அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் என பல அமைப்புகள் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினை பா்வையிட்டு வருகின்றார்கள்.

இந்த வகையில் இன்று மாவட்ட செயலகத்தின் உற்பத்தி திறன் செயற்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கும் வினைத்திறனுடன் கூடிய சேவைகள் என்பவற்றை பார்வையிடுவதற்காகவும், செயலக பணியாட் தொகுதியுடனான அனுபவ பகிர்வினை மேற்கொள்ளும் பொருட்டும்  மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்ரின் அவர்களின் தலைமையில் மன்னார் வலயக்கல்விப்பணிமனையை சேர்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் மன்னார் கல்வி வலய பாடசாலை அதிபர்கள் ஆகியோர் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டு அலுவலக உற்பத்தி திறன் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன் அலுவலர்களுடன் கலந்துரையாடி அனுபவங்களையும் பெற்றுக்கொண்டனர்.


 

கிளி மாவட்டத்தில் கஜு மற்றும் பழ உற்பத்திகளை ஊக்குவிக்குமாறு அரசாங்க அதிபர் கோரிக்கை

News & Events

கிளிநொச்சி மாவட்டத்தில் கஜு மற்றும் பழ உற்பத்திகளை ஊக்குவிக்குமாறு அரசாங்க அதிபர் திரு சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை ஏற்றுமதி அதிகாரசபையின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று (14.03.2017) இடம்பெற்ற ஏற்றுமதியாளர்களை உருவாக்குதல் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டு தலைமையுரை ஆற்றுகையில் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் கஜு உற்பத்தியிலும், பழ செய்கையிலும் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர், இவ் உற்பத்திகள் ஏற்றுமதிப் பொருட்களாகவும் அதிக இலாபமீட்டும் பொருட்களாகவும் உள்ளன. இவ் உற்பத்திகளில் ஈடுபடுபவர்களுக்கு ஏற்றுமதி அதிகாரசபை தொழிநுட்ப ரீதியாக பயிற்சி வழங்கவேண்டும் இதனால் அதிக  உற்பத்தியினை பெறமுடியும் என்றார்.

ஏற்றுமதி அதிகாரசபையின் வடக்குக்கான பணிப்பாளர் எஸ்.ரகுமான் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், 2000 ஏற்றுமதியாளர்களை உருவாக்குதல் எமது நோக்கமாகும். இதன் ஆரம்ப நிகழ்வு 23.03.2017ம் திகதி யாழ் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இதன் மூலம் உள்நாட்டு உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதோடு சிறந்த உற்பத்திகளையும் உருவாக்க முடியும். அத்துடன் ஏற்றுமதி அதிகார சபை இவை தொடர்பான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், கடன்வசதி என்பவற்றை வழங்குகின்றது எனவும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சி.சத்தியசீலன், மாவட்ட திட்டப்பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவித்திட்டப் பணிப்பாளர்கள், உள்ளுராட்சித் திணைக்கள உத்தியோகத்தர்கள், தொழில்துறைத் திணைக்கள உத்தியோகத்தர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், கடற்றொழில் சமாச பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 
More Articles...
Sinhala (Sri Lanka)Tamil-Sri LankaEnglish (United Kingdom)
District Secretary


Suntharam Arumainayaham

Additional District Secretary

Sivapathasuntharam Sathiyaseelan

scheduled Events
April 2017
S M T W T F S
26 27 28 29 30 31 1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 1 2 3 4 5 6