News & Events
மாற்றுவலுவுள்ளோருக்கான தொழிற்பயிற்சி நிலையம் கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ளதுவடக்கு மாகாண மாற்றுவலுவுள்ளோருக்கான தொழிற்பயிற்சி நிலையம் கிளிநொச்சியில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா 20.10.2017 அன்று நடைபெற்றது.
சமூக சேவைகள். நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சமூக சேவைகள் திணைக்களத்தினால் வட மாகாணத்துக்கான மாற்றுவலுவுள்ளோருக்காக அமைக்கப்படவுள்ள இப்பயிற்சி நிலைய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் திரு சி.சத்தியசீலன் அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட சமூக சேவைகள். நலன்பரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சின் மேலதிக செயலாளரும் சமூக சேவைகள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளருமாகிய திரு பிரதீப் ஜயரட்ண அவர்கள் இப்பயிற்சி நிலையத்துக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
80 மில்லியன் ருபா செலவில் நிர்மாணிக்கப்படும் இப்பயிற்சி நிலையத்தில் 2018 ஆடி மாதமளவில் பயிற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது எனவும் இத்தொழிற்பயிற்சியில் 15 வயதிலிருந்து 38 வயதுவரையுள்ள மாற்றுவலுவுள்ளோருக்கு தொழிற்பயிற்சி வழங்கப்படும் எனவும் இப்பயிற்சியின் போது அவர்களுக்கான உணவு உடை தங்குமிட வசதி மற்றும் ஊக்குவிப்பு தொகை என்பன வழங்கப்படும் எனவும் சமூக சேவைகள். நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் திரு பிரதீப் ஜசரட்ண அவர்கள் தனது உரையில் தெரிவித்தார். பொருளாதார மத்திய நிலையம் ஜனாதிபதியினால் திறந்த வைக்கப்பட்டது
|