News & Events

புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கலுக்கான ஆலோசனைக் கூட்டம்

கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் இவ்வாண்டுக்கான வருடாந்த பொங்கலை முன்னிட்டு உற்சவ முன்னாயத்த கூட்டம் இன்று 20.2.2017 அன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் ஆலய முன்றலில் இடம் பெற்றது.

எதிர்வரும் 09.04.2017 அன்று நடைபெறவுள்ள இவ்வாலயத்தின் பொங்கல் விழாவுக்கான ஏற்பாட்டு கூட்டத்தில் பண்டமெடுத்தல், சுகாதாரம், போக்குவரத்தது, வீதி அபிவிருத்தி, குடிநீர், பாதுகாப்பு, சிரமதானம், கடைவாடகை போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.

ஆலய உற்சவ காலங்களில் பொலித்தீன் பாவனை முற்றாக தடை செய்யப்படுவதோடு மாற்றீடாக காகிதாதி பைகள் மற்றும் பனையோலைப் பெட்டிகளை பயன்படுத்த வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் தீன்பண்டங்கள், குளிர்பானங்கள், குடிநீர் என்பவற்றின் சுகாதாரம் உச்ச அளவில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கௌரவ வடமாகண கல்வி அமைச்சர் ரி.குருகுலராஜா, கௌரவ வடமாகாணசபை உறுப்பினர் பி.அரியரட்ணம், கண்டாவளை பிரதே செயலாளர் திரு.த.முகுந்தன், உதவி மாவட்ட செயலாளர் த.பிருந்தாகரன், உள்ளுராட்சி ஆணையாளர், கரைச்சி பிரதேச சபை செயலாளர், மாவட்ட பொலிஸ் உதவி அத்தியட்சகர் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள், ஆலய பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


 

சிவ ஆராதனையும் பிரார்த்தனைப்பவணியும்

 

ஓம் நமசிவாய சிவ ஆராதனைபயும் பிரார்த்தனைப்பவணியும் 15.2.2017ம் திகதி கிளிநொச்சி A9 வீதியில் அமைந்துள்ள பிள்ளளையார் ஆலயத்திலிருந்து கிளிநொச்சி கந்தசாமி ஆலயம் வரை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கடந்தகால அசாதாரண சூழ்நிலைகளினால் உளரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மன ஆறுதல் கிடைப்பதற்காகவும், மாணவர்களின் கல்வி உயர்வுக்காகவும், இளையோர்களின் நல்லொழுக்க நல்வாழ்வுக்காகவும், பெண்கள் மற்றும் சிறார்களின் பாதுகாப்பிற்காகவும், விவசாய வியாபார பொருளாதாரம் உயர்வடையவும், அசாதாரண சூழ்நிலைகளினால் மரணித்த மக்களின் ஆத்ம சாந்திக்காகவும் இன,மத,பேதமின்றி அனைவரது நல்வாழ்வு வேண்டியும் இவ் ஆராதனைப்பிரார்த்தனை நடை பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட செயலகமும் யாழ்ப்பாண வீணாகான குருபீடமும் இணைந்து ஏற்பாடு செய்த இந் நிகழ்வில் கிளிநொச்சி உதவி மாவட்டச் செயலாளர் திரு.த.பிருந்தாகரன், கிளிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.முருகவேல் மற்றும் குருபீட சிவஸ்ரீ சபா.வாசுதேவகுருக்கள் மற்றும் சிவாச்சாரியர்கள், உத்தியோகத்தர்கள், இந்து அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள், பக்த அடியார்கள் என ஏராளமானோர் கலந்து வேத திருமுறை பாராயணம் ,பஜனை என்பன நிகழ்த்தப்பட்டு இறுதியாக நிகழ்வில் கலந்து கொண்டோர் அனைவரும் தமது கைகளினால் சிவலிங்க பெருமானுக்கு திரு மஞ்சன அபிசேகமும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களால் பாரம்பரிய கலாசாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலைநிகழ்வுகளும் நிகழ்த்தப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.


 
More Articles...
Sinhala (Sri Lanka)Tamil-Sri Lanka
District Secretary


Suntharam Arumainayaham