செய்தி மற்றும் நிகழ்வுகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டல் தாவரங்களை பாதுகாப்பதற்கான திட்டம்

There are no translations available.

கிளிநொச்சி மாவட்ட கரையோரப்பகுதிகளில் கண்டல் தாவரங்களை பாதுகாப்பதற்கான செயற்திட்ட அறிமுக கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் திரு சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இன்று(22.06.2017) இடம் பெற்றது.

இலங்கை சிறு மீனவ சம்மேளனத்தின் அனுசரனையுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ள கண்டல் தாவரங்களை பாதுகாப்பதற்கான கண்டல் தாவர மர நடுகைத்திட்டம்,கரையோர சமூகங்களின் வாழ்வாதார அபிவிருத்தி திட்டம் ஆகியவற்றை அறிமுகம் செய்து வைக்கும் இக்கலந்துரையாடலில் மேற்படி அமைப்பின் தலைவர் அனுராத விக்கிரமசிங்க, திட்ட முகாமையாளர் ஜெயதிலக மற்றம் யாழ் பல்கலைகழக விரிவுரையாளர் திருமதி ஜி.ராஜினி போன்றோர் கலந்துகொண்டு திட்டம் தொடர்பான விளக்கம் அளித்தனர்.

மேலும் இத்திட்டத்தின் அறிமுக கலந்துரையாடல் அடுத்து பிரதேச மட்டத்தில் நடைபெற்று பின்னர் கிராம மட்டங்களில் அமுல்படுத்தப்படும் என தெரிவித்தனர்.இந்நிகழ்வில்  பிரதேச செயலாளர்கள், மாவட்ட உதவிதிட்ட பணிப்பாளர், மீன்பிடி உதவிப்பணிப்பாளர், வனவளத்திணைக்கள உத்தியோகத்தர்கள், பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், கடற்தொழில் சங்கங்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

தேசிய இந்து அறநெறிக்கல்வி விழிப்புணர்வு வாரமும் கொடி தினமும் கிளிநொச்சியில் அனுஸ்டிப்பு

There are no translations available.

தேசிய இந்து அறநெறிக்கல்வி விழிப்புணர்வு வாரம் மற்றும் இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தினம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.சி.சத்தியசீலன் அவர்களது தலைமையில் கிளிநொச்சி ஏ9 வீதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மாவட்ட செயலகம் ஊடாக கிளிநொச்சி கிருஸ்ணர் கோவில் வரை பேரணியாக சென்று அனுஸ்டிக்கப்பட்டது.

இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால்  இந்துசமய அறநெறிக்கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் வகையில் ”அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்வீர்” என்ற தொனிப்பொருளில் தேசிய ரீதியில் அறநெறிக்கல்வி வாரம்  சகல மாவட்டங்களிலும் அனுட்டிக்கப்படுகின்றது. அந்த வகையில் இன்று கிளிநொச்சி மாவட்டத்திலும் மாவட்ட செயலக இந்து கலாச்சார பிரிவினால் ஒழுங்கு செய்து நடாத்தப்பட்டது. இவ் விழிப்புணர்வு நடைபவனியில் மாவட்ட மற்றம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அறநெறி ஆசிரியர்கள், ஆலய நிர்வாகத்தினர்கள் இந்துசமய பக்தர்கள் என பலர் கலந்துகொண்டனர். இந் நடைபவனியினைத் தொடர்ந்து கிருஸ்ணர் ஆலயத்தில் கிளிநொச்சி மாவட்ட சின்மயா மிஸன் சுவாமிஜி அவர்களால் அறநெறிக்கல்வி பற்றிய சிறப்பு சொற்பொழிவும் இடம்பெற்றது.

இதேவேளை இக்கொடிவார சிறப்பு நிகழ்வாக அரச அதிபர் திரு சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் நிதியினை வழங்கி கொடி வாரத்தை ஆரம்பித்து வைத்தார். 
மேலதிகக் ஆக்கங்கள்...
Sinhala (Sri Lanka)Tamil-Sri LankaEnglish (United Kingdom)
மாவட்டச்செயலாளர்


சுந்தரம் அருமைநாயகம்

மேலதிக மாவட்டச் செயலாளர்

சிவபாதசுந்தரம் சத்தியசீலன்

scheduled Events
July 2017
S M T W T F S
25 26 27 28 29 30 1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31 1 2 3 4 5