பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான சுயதொழில் பயிற்சி நெறி

கிளிநொச்சி மாவட்டத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் பற்றிக் சாயமிடும் பயிற்சி நெறி கிளிநொச்சியில் அமைந்துள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான தேசிய நிலையத்தில் 03.07.2017 அன்று கிளிநொச்சி மாவட்ட உதவி அரசாங்க அதிபரும் மேற்படி நிலையத்தின் உதவிப்பணிப்பாளருமாகிய திரு. த.பிருந்தாகரன் அவர்களது தலைமையில் இடம் பெற்றது.

மகளீர் அபிவிருத்தி மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அனுசரணையுடன் கிளிநொச்சி மாவட்ட செயலக ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் சுயெதொழில் பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்றையதினம் பற்றிக்சாயம் இடும் பயிற்சிநெறியில் கலந்துகொண்ட ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தலா 5000 ரூபா பெறுமதியான மூலப்பொருட்களும் வழங்கப்பட்டன.

இப்பயிற்சியில் கலந்து கொண்ட பயனாளிகள் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான தேசிய நிலையத்தில் தொடர்ச்சியாக தமது செயற்பாடுகளை மேற்கொள்ளலாம் எனவும் இவர்களுக்குரிய மேலதிக பயிற்சிகளும் தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும் நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

மாகாண விளையாட்டு போட்டியில் கிளிநொச்சி மாவட்டம் இரண்டாம் இடத்தினை தட்டிச்சென்றுள்ளது

2017ம் ஆண்டுக்கான வடமாகாண விளையாட்டுப்போட்டிகளில் 175 புள்ளிகளை பெற்று கிளிநொச்சி மாவட்டம் 2ம் இடத்தினை பெற்றுக்கொண்டது.

ஆண்டுதோறும் வடமாகணத்திலுள்ள மாவட்டங்களுக்கிடையே விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. அந்தவகையில் 11வது வடமாகாண விளையாட்டு போட்டி அண்மையில் இடம்பெற்றது. இதில் நடைபெற்ற 43 விளையாட்டுகளில் தைகொண்டோ (பெண்கள்), யூடோ (பெண்கள்), கரப்பந்தாட்டம்(பெண்கள்), கடற்கரை கரப்பந்தாட்டம்(பெண்கள்), கடற்கரை கரப்பந்தாட்டம்(ஆண்கள்), துடுப்பாட்டம்(ஆண்கள்) போன்ற விளையாட்டுகளில் முதலாம் இடங்களையும், 10 விளையாட்டுகளில் இடண்டாம் இடங்களையும், 9 விளையாட்டுகளில் மூன்றாம்  இடங்களையும் கிளிநொச்சி மாவட்டம் பெற்றுக்கொண்டது. இப்போட்டிகளில் கிளிநொச்சி மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட வீர வீரங்கனைகளுக்கு கிளிநொச்சி மாவட்டம் சார்பாக அரச அதிபர் திரு சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

மேலும் அடுத்த 2018ம் ஆண்டுக்கான மாகாண விளையாட்டு போட்டிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் நடத்துவதற்கான ஆரம்பநிகழ்வாக மாகாண விளையாட்டு கொடி மாகாண விளையாட்டு பணிப்பாளர் திரு இ.குருபரன் அவர்களால் கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு எம்.ஆர் மோகனதாஸ் அவர்களிடம் சம்பிரதாய பூர்வமாக கையளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்கு கிளிநொச்சியிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

நாட்டில் இடம்பெற்ற இயற்கை அனர்த்த்தினால் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்காக கிளிநொச்சி மாவட்ட செயலகமும் பிரதேச செயலகங்களும் இணைந்து கிளிநொச்சி வாழ் மக்கள் மற்றும் வர்த்தகர்கள் வழங்கிய உணவுப்பொருட்களை நேற்றைய தினம் 1.6.2017  அரச அதிபர் திரு.சுந்தரம் அருமைநாயகம் அவர்களது தலைமையில் சென்ற உத்தியோகத்தர்கள் காலி மாவட்ட செயலகத்தில்  ஜனாதிபதியிடம் கையளித்தனர்

உலர் உணவு, மருத்துவ பொதிகள் மற்றும் ஆடைகள் உட்பட்ட 15 இலட்சம் ரூபா பெறுமதிக்கு மேற்பட்ட நிவாரணப்பொருட்கள் மூன்று பார ஊர்திகளில் எடுத்து செல்லப்பட்டன.

இப்பெருந்தொகையான நிவாரணப்பொருட்களை வழங்கிய மாவட்ட மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் அரச அதிபர் தனது நன்றிகளை தெரிவித்ததோடு இது ஒரு நல்லெண்ண செயற்பாடாகவும் அமையும் எனவும் தெரிவித்தார்.


 
Sinhala (Sri Lanka)Tamil-Sri LankaEnglish (United Kingdom)
District Secretary


Suntharam Arumainayaham

Additional District Secretary

Sivapathasuntharam Sathiyaseelan

scheduled Events
July 2017
S M T W T F S
25 26 27 28 29 30 1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31 1 2 3 4 5