Home
போரினால் பாதிக்க பட்டவர்களுக்கான நட்ட ஈடு கொடுப்பனவு கிளிநொச்சியில் வழங்கப்பட்ட்டது
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு ,புனர்வாழ்வு ,மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் புனர்வாழ்வு அதிகாரசபையினூடாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் நட்ட ஈடு காசோலை வழங்கும் நிகழ்வு 5.4.2018 வியாழக்கிழமை கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்றது . இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தில் 305 பேருக்கு சொத்தழிவுக்கான காசோலைகளும் 18 பேருக்கு இறப்பு காயம் என்பவற்றுக்கான கொடுப்பனவுகளும் 29 அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளும் மற்றும் 11 ஆலயங்களுக்கான கொடுப்பனவு காசோலைகளும் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சி.சிறிதரன் , வடமாகாணசபை உறுப்பினர் கௌரவ பசுபதிப்பிள்ளை ,அமைச்சின் செயலாளர் திரு பொன்னையா சுரேஷ்,கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு சி.சத்தியசீலன் புனர்வாழ்வு அதிகார சபை தலைவர் ,உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்
"Youth with Talent"
இத் திட்டத்தில் கிளிநொச்சி மாவட்டமும் சிறந்த பங்களிப்பினை ஆற்றியமைக்காக கௌரவ பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்களுக்கு விருது வழங்கி கெளரவித்தார். கிளிநொச்சி பட்டதாரி பயிலுனருக்கான நேர்முக தேர்வுகிளிநொச்சி பட்டதாரி பயிலுனருக்கான நேர்முக தேர்வு 23 மற்றும் 24ம் திகதிகளில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடை பெறவுள்ளது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சிற்கு இதுவரை விண்ணப்பம் செய்யாத பட்டதாரிகள் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் உரிய விண்ணப்பங்களை பெற்று 20.04.2018 ம் திகதிக்கு முன்னர் மாவட்ட செயலகத்தில் சமர்ப்பித்து நேர்முக தேர்விற்கான திகதியினை பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார். நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படடவர்களின் பெயர் விபரங்கள் கீழே பதிவிறக்கம் செய்து பார்வையிட முடியும் . நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டோர் பெயர் விபரங்கள் |